» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நுகர்வோருக்கு திருமண மண்டபம் ரூ.26,500 வழங்க குறைதீர் ஆணையம் உத்தரவு!

சனி 24, செப்டம்பர் 2022 11:58:01 AM (IST)

சேவைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு திருமண மண்டபம் ரூ.26,500 வழங்க வேண்டுமென குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரைச் சார்ந்த ஐயப்பன் என்பவர் கோட்டாரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ரூ.19,000 முன்பணம் செலுத்தி திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார். ஆனால் சில காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடத்தப்படாமல் தள்ளிப் போய் உள்ளது. வேறு ஒரு தேதியில் பதிவு செய்வதற்கு முயற்சி செய்த போது அந்த தேதியில் திருமண மண்டபம் காலியாக இல்லை. ஆகவே தான் செலுத்திய முன்பணத் தொகையை திரும்ப தருமாறு மண்டபத்தின் செயலாளரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை. பின்பு மனுதாரர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் திருமண மண்டபத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.5,000, முன்பணத் தொகை ரூ.19,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 ஆக மொத்தம் ரூ.26,500 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory