» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மத்திய அரசின் எஸ்.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: வேலைவாய்ப்பு மையம் அழைப்பு
வெள்ளி 23, செப்டம்பர் 2022 5:15:57 PM (IST)
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) அறிவித்துள்ள போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் வாயிலாக நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள SSC (Combined Graduation Level) போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக நடத்தப்படவுள்ளது.26.09.2022 அன்று தொடங்கப்படவிருக்கும் இவ்வகுப்புகள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரையான அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து தன்னார்வ பயிலும் வட்டத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

தக்கலையில் 8ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:30:33 PM (IST)

கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை: திற்பரப்பு அருகே பரபரப்பு !
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:41:22 PM (IST)

