» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி பகவதி அம்மன் கோவிலில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்

வெள்ளி 23, செப்டம்பர் 2022 12:54:29 PM (IST)குமரி பகவதி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி கே சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு கன்னியாகுமரி வந்தார். அங்கு வந்த அவருக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு அம்மனை தரிசனம் செய்தார். 

மேலும் கோவிலின் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி தியாக சௌந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திரகாந்த விநாயகர் சன்னதி, பாலசௌந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர் ஸ்ரீ சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

அதன் பிறகு கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தார். அவருடன் இந்து சமய அறநிலை ஆட்சித் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory