» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தோவாளை யூனியனில் ரூ.4.38 கோடியில் வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் அரவிந்த் ஆய்வு

செவ்வாய் 20, செப்டம்பர் 2022 10:28:31 AM (IST)



தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார்.

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், செய்தியாளர் பயணத்தின்போது நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் : கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கீழ், தடிக்காரன்கோணம் ஊராட்சி பகுதியில் மாநில உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பில் கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை மற்றும் கீரிப்பாறை தொழிலாளர் காலனிக்கு செல்வதற்கு புதிதாக 2 பாலங்கள் அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பில் பயனாளி டயனா மேரி அவர்களின் வீட்டின் பணி செயல் அளவில் முடிக்கப்பட்டிருந்ததோடு, ரூ.2.40 இலட்சம் மதிப்பில் மற்றொரு பயனாளியான தாவீது அவர்களின் வீட்டின் பணி செயல் அளவில் முடிக்கப்பட்டிருந்ததை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1.99 இலட்சம் மதிப்பில் மண்புழு உரம் கொட்டகை அமைக்கப்பட்டிருந்ததைத்தொடர்ந்து, பணியினை விரைந்து ஆரம்பிக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, தடிக்காரன்கோணம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2006-ல் கட்டப்பட்ட சமூக நலக்கூடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, உணவு அருந்தும் கட்டிடத்தில் பழுதடைந்துள்ள உணவு அருந்தும் மேசைகள் மற்றும் டைல்ஸ் சரி செய்ய வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, அருமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை மற்றும் வேதியியல் ஆய்வுக்கூடம் ஆய்வு மேற்கொண்டதோடு, அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்திலுள்ள சமையலறை ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து தலைமையாசிரியர்களிடம் கேட்டறிந்து, மாணவ, மாணவியர்கள் சாப்பிடும் முன் பொறுப்பு ஆசிரியர் பரிசோதனை மேற்கொள்வதோடு, ஒவ்வொருநாளும் மாதிரி உணவினை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், ரூ.1.92 இலட்சம் மதிப்பில் வீரவநல்லூரில் கிடைமட்ட உறிஞ்சுக்குழி அமைக்கும் பணி முடிக்கப்பட்டிருந்ததை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இறச்சக்குளம் ஊராட்சி பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15.27 இலட்சம் மதிப்பில் இறச்சக்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிட பணியினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, ரூ.4.29 இலட்சம் மதிப்பில் இறச்சகுளம் பிளசன்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் நடைப்பாதையினையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, ஈசாந்திமங்கலம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிட பணி என மொத்தம் ரூ.4.38 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு செய்தியாளர்கள் பயணத்தின்போது மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இப்பயணத்தின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி, தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்ற தலைவர் பிராங்கிளின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory