» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி வெளியிட்டார்!

சனி 27, ஆகஸ்ட் 2022 5:08:56 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ளார்.

ந்நிகழ்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவதே காவல்துறையின் நோக்கமாகும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் காவல்துறைக்கு தேவைப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் சமுதாயத்தின் மீது அக்கறையுணர்வுடன் தங்கள் பகுதிகளிலோ, பள்ளி மற்றும் கல்லூரி அருகிலோ, கடைகள் போன்ற பொது இடங்களிலோ கஞ்சா புகையிலை போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற தகவல் தெரிந்தால் செல்போன் எண் 83000 14567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவலாகவோ அல்லது வாட்ஸ் தகவலாகவோ 24 மணிநேரமும் தெரிவிக்கலாம். 

குறிப்பாக அவ்வாறு தகவல் தருபவர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்படும். இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். கஞ்சாவை இளைஞர்கள் பயன்படுத்தினால் அவர்கள் ஆண்மை அற்றவர்களாகிவிடுவார்கள். இளைஞர்கள் அதை உணர்ந்து  நல்ல வழியில் சென்று சமுதாயத்தில் சிறந்தவர்களாக திகழவேண்டும் என்று கூறினார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை  கஞ்சா விற்பனை மற்றும் பதுக்கி வைத்ததாக 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 204 பேர் கைது செய்யப்பட்டு, 122 கிலோ கஞ்சா மற்றும் 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் 208 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் வழக்கில் சம்மந்தப்பட்ட 37பேர் உட்பட 179 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல்துறை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

TutyAug 1, 2024 - 11:25:55 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடி அண்ணாநகர் 3 தெருவில் பாரத பால கணேஷ் டீ கடையில் ( அருணாச்சலம் கடைக்கு உள்ளே அட்டை பெட்டி களுக்கு அடியில் ட்ராயர் டேபிள் உள்ளே புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்ய படுகிறது) சிறியவர் . உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory