» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அமிர்தா கல்லூரியில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:51:59 AM (IST)நாகர்கோவில் இறச்சக்குளத்தில் இயங்கி வரும் அமிர்தா கல்வி நிறுவனத்தில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

விழாவிற்கு அமிர்தா கல்வி நிறுவனங்களின் கல்விசார் இயக்குநர் டி.கண்ணன், நிர்வாக மேலாளர் வி. பிரபாகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். அமிர்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஓருங்கினைப்பாளா் குமார்  வரவேற்புரை வழங்கினார். இதனை தொடர்ந்து அமிர்தா கல்வியியல் கல்லூரியின் முதல்வர் எம்.கிருஷ்ணகுமார்  மூவர்ண கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். 

அமிர்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைத்தலைவர் எஸ்.வி. மகேஷ் குமார்  சுதந்திர தின விழா உறுதிமொழி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமிர்தா தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர். லெட்சுமணன்  நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் பேராசிரியர்கள், மாணவ – மாணவிகளும் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory