» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:07:18 AM (IST)

குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தேசியக் கொடி ஏற்றிவைத்து நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்த ஆட்சியர் அரவிந்த்தை மாவட்ட போலீஸ் எஸ்பி ஹரிகிரண் பிரசாத் வரவேற்றார். இதை தொடர்ந்து ஆட்சியர் அரவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து போலீசார் அணிவகுப்பு மரியாதை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். மூவர்ண கலரிலான பலூனை பறக்க விட்டார். புறாக்களும் பறக்க விடப்பட்டது. பின்னர் போலீசார், ஊர்க்காவல் படை, என்.சி.சி. மாண வர்களின் மரியாதையை ஏற்று கொண்டார்.
இதை தொடர்ந்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 14 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 17,ஆயிரத்து 261 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த 45 போலீசாருக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் அரவிந்த் வழங்கினார்.
10 ஊர்க்காவல் படையினருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நெதர்லாந் தில் நடந்த தடகளப்போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற போலீஸ் கிருஷ்ண ரேகாவிற்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கனார். ஊராட்சிகளில் சிறப் பாக பணிபுரிந்த ஊராட்சி களுக்கு கேடயங்க ளும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. திங்கள் நகர் பேரூராட்சிக்கு கழிவு நீர் மேலாண்மை சிறப்பு செயல்பாட்டிற்காக கேடயம் வழங்கப்பட்டது.
கிள்ளியூர் பேரூராட்சிக்கு மக்கள் இயக்கம் சிறப்பு செயல்பட்டிற்கும், ஆற்றூர் பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் தடை சிறப்பு செயல்பாட்டிற்கும், கப்பி யறை பேரூராட்சிக்கு திடக் கழிவு செயல்பாட்டிற்கு கேடயங்கள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு துறை, மருத்துவ துறை, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துறை பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை, வேளாண்துறை, கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப் பாக பணியாற்றிய 205 பேருக்கு சான்றிதழ்களை ஆட்சியர் அரவிந்த் வழங்கினார்.
10 ஆண்டுகள் விபத்து இன்றி பணிபுரிந்தவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப் பட்டது. இதை தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, சார் ஆட்சியர் அலர்மேல் மங்கை மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் சிறையில் அடைப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 9:14:31 PM (IST)

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)

மோந்தா புயல் எதிரொலி: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து!
புதன் 29, அக்டோபர் 2025 10:32:31 AM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு : தூத்துக்குடி பெண்கள் 2பேர் சிக்கினர்!
புதன் 29, அக்டோபர் 2025 8:07:03 AM (IST)

மாத்தூர் தொட்டி பாலத்தில் சீரமைப்பு பணி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தகவல்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:38:19 PM (IST)

திருவனந்தபுரம்-நாகர்கோவில் பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:19:18 AM (IST)


.gif)