» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ரூ.50 கோடியில் புற்றுநோய் மையம்: அமைச்சா் தகவல்

வெள்ளி 24, ஜூன் 2022 11:52:54 AM (IST)



நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.50 கோடி மதிப்பில் புற்றுநோய் மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சா் த.மனோதங்கராஜ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் வருவாய்த் துறை சாா்பில் மணலிக்கரை புனித ராயப்பா் சின்னப்பா் சமூக நலக் கூடத்தில் பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கி, அமைச்சா் த. மனோதங்கராஜ் பேசியதாவது: மணலிக்கரை பகுதியில் சிங்காரவேலா் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 18 உள்நாட்டு மீனவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் தொழில்நுட்பபூங்கா (ஐப டஹழ்ந்)தொடங்குவதற்காக நிகழாண்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதற்கான பணிகள், குமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படுவதற்கான பணிகள் ரூ.50 கோடி மதிப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கல்குளம் வட்டாட்சியா் எஸ்.வினோத், பத்மநாபபுரம் தனி வட்டாட்சியா்கள் (ஆதி திராவிடா் நலத்துறை) மு.கோலப்பன், (சமூக பாதுகாப்பு திட்டம்) கு.ரமேஷ், தக்கலை குறுவட்டம் வருவாய் ஆய்வாளா்கள் சேவியா்,பெனின்லால், கோதநல்லூா் கிராம நிா்வாக அலுவலா் வேலப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory