» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆட்டோ டிரைவருக்கு நிதி நிறுவனம் ரூ.20ஆயிரம் நஷ்ட ஈடு : நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

வியாழன் 23, ஜூன் 2022 10:54:18 AM (IST)

ஆட்டோ டிரைவருக்கு தனியார் நிதி நிறுவனம் ரூ.20ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலகிருஷ்ணன்புதூர் அம்மன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.1 இலட்சம் கடன் வாங்கினார். இதற்காக ஆட்டோவின் ஆர்.சி.புத்தகம் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றை நிதிநிறுவனம் வாங்கி வைத்துக் கொண்டது. இந்நிலையில் விஜயகுமாரின் ஆட்டோ விபத்தில் சிக்கி அதற்கு ரூ.29,962 ஐ செலவு செய்தார். 

இதற்கிடையே விபத்து ஏற்பட்டுள்ளதால் இன்சூரன்ஸ் தொகை பெற ஆர்.சி.புத்தகத்தை நிதி நிறுவனத்திடம் கேட்டபோது, அதனை நிதி நிறுவனம் வழங்கவில்லை. மேலும் தவணை தொகை செலுத்த தாமதமானதால் ஆட்டோவை நிதி நிறுவனம் பறிமுதல் செய்தது. பின்னர் விஜயகுமார் பணத்தை கட்டி ஆட்டோவை நிதி நிறுவனத்திடமிருந்து மீட்டார். அப்போது ஆட்டோவில் இருந்த மீட்டர், பழுது பார்க்கும் உபகரணங்கள் போன்றவற்றை நிதி நிறுவனம் எடுத்திருந்தது தெரியவந்தது.  இது பற்றி விஜயகுமார் கேட்டபோது மேலும் ரூ.14,000 கொடுத்தால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் மற்றும் பிற பொருட்கள் கிடைக்கும் என தெரிவித்தனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஜயகுமார் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு ஆர்.சி.புத்தகம், ஆட்டோவில் இருந்த எடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் விபத்து ஏற்பட்ட போது செலவு செய்த தொகை ரூ.29,962 வழங்க வேண்டும். மேலும் நிதி நிறுவனம்  விஜயகுமாருக்கு ரூ.20,000 நஷ்ட ஈடாகவும், வழக்கு செலவு தொகை ரூ.2,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் உத்திரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory