» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளும் இயக்கம் : 1050 மெகாவாட் மின்உற்பத்தி!

வியாழன் 26, மே 2022 10:49:46 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 5 மின்உற்பத்தி யூனிட்டுகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. 

அதேபோல் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவும் கடந்த ஒரு மாதமாக பிற்பகல் தொடங்கி இரவு வரை மட்டுமே அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் நேற்று முதல் வழக்கம் போல தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள  5 யூனிட்டுகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் முழு மின்உற்பத்தியான 1050 மெகாவாட் தினமும் உற்பத்தி செய்யப்படுகிறது.


மக்கள் கருத்து

தூத்துக்குடிமே 26, 2022 - 11:45:05 AM | Posted IP 162.1*****

மூன்றில் மின் உற்பத்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory