» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி கடற்கரையை சென்னை மெரினா பீச் போன்று மாற்ற திட்டம் : அதிகாரிகள் ஆய்வு

புதன் 25, மே 2022 4:29:37 PM (IST)

குமரி கடற்கரையை அழகுப்படுத்தும் திட்டம் குறித்து சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாத காலம் சபரிமலை சீசன் காலத்திலும் ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலத்திலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் காணப்படும்.

சீசன் காலங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வரை கன்னியாகுமரிக்கு வந்து செல்வதாக சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கிறார்கள். ஆனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒரு நாளுக்கு மேல் இங்கு தங்கி இருப்பதில்லை. 
 
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடுகிறார்கள். அதன் பிறகு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து ரசிக்கிறார்கள். அதன் பின்னர் காந்தி நினைவு மண்டபம் காமராஜர் மணிமண்டபம் அரசு அருங்காட்சியகம் மியூசியம் மீன் காட்சிசாலை அரசு பழத் தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றை பார்த்து பொழுதை கழிக்கிறார்கள். 

மாலையில் சூரியன் மறையும் காட்சியை பார்த்து ரசித்துவிட்டு இரவோடு இரவாக சொந்த ஊருக்கு திரும்பி விடுகிறார்கள். கன்னியாகுமரியில் வேறு பொழுது போக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூடுதல் நாட்கள் தங்கி இருப்பதில்லை. எனவே கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்  கன்னியாகுமரி சிலுவைநகர் கடற்கரைப் பகுதியை அழகுபடுத்த கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டுஉள்ளது.

சூரிய அஸ்தமனப் பூங்கா அருகாமையில் உள்ளது சிலுவை நகர் கடற்கரை பகுதி முட்புதர்களால் சூழப்பட்டு உள்ளது. இதனைஅகற்றிசுமார் 5 ஏக்கர் பரப்பளவுக்கு மணல் பரப்பி இயற்கையான கடற்கரையை உருவாக்கி அழகுபடுத்த பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.  இங்கு வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் சூரியக் குளியல் எடுப் பதற்கு வசதியாக சென்னை மெரினா பீச் போன்று மணல் பரப்பப்படுகிறது.மேலும் கடற்கரை மணலில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து கடல் அழகை ரசிக்கும் வகையில் நவீன குடில்கள், இருக்கைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரையை அழகுப்படுத்தும் இடத்தை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவர் குமரி ஸ்டீபன், செயல் அலு வலர் ஜீவநாதன், உதவி பொறியாளர் இர்வின் ஜெயராஜ், சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


மக்கள் கருத்து

ஓ அப்படியாமே 25, 2022 - 05:31:05 PM | Posted IP 162.1*****

பக்கத்துல கூவம் CONFIRM

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory