» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாசன கால்வாய் தூர்வாரும் பணி: சகோ. மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்!

புதன் 25, மே 2022 11:58:45 AM (IST)



தாமிரபரணி ஆற்றின் 7-வது அணைக்கட்டு பாசன கால்வாய்களை தூர்வாரும் பணியை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்.

தாமிரபரணி ஆற்றின் 7-வது அணைக்கட்டு வல்லநாடு மருதூர் பாசன மடை எண் 4,5 பாசன கால்வாய்களை தூர்வாரும் பணி துவக்க விழா ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் நடைபெற்றது. பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் முருகன், செயலாளர் சங்கரன், பொருளாளர் பாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் கலந்து கொண்டு தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார். 

பின்னர் அவர் பேசுகையில், ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தொகுதி மக்களிடம் மக்களோடு மக்களாக பழகி நல்ல இருதயம் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மக்களுக்கு கிடைத்துள்ளார். விழாவில் அவர் கலந்து கொண்டது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. இறைவன் எங்களுக்கு சொல்லி இருப்பது ஜனங்களுக்கு நன்மை செய்யணும். ஜனங்களுக்கு நன்மை செய்ய எங்களுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார். நற்செய்தி சொல்வது மாத்திரமல்ல ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தேவையுள்ள மக்களுக்கு அவர்களது தேவைகளை அறிந்து எங்களால் என்ன உதவிகள் செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம். 

இறைவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். விவசாயிகள் மீது அதிக பாசம் எங்களுக்கு உண்டு. விவசாயிகள் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். ஒரு தேசத்தில் விவசாயிகள் ஆசீர்வதிக்கப்பட்டு உயர்த்தப்பட்டு சந்தோசமாக இருந்தால் அந்த தேசம் ஆசீர்வதிக்கப்படும். விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்கப்பட்டால் ஒரு மாநிலத்தில் ஆசீர்வாதம் உண்டாகும் என்பது எங்களது விசுவாச நம்பிக்கை. நாட்டிற்கு இரண்டு பேர் முக்கியமானவர்கள். ராணுவ வீரர்களும் விவசாயிகளும் தான். விவசாயிகளுக்கு எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம். விவசாயிகள் நன்றாக செழித்து ஆசீர்வதிக்கப்பட வேண்டும். அவர்களது வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, வழக்கறிஞர் அதிசயமணி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாஸ்டின் வினோ, விவசாய சங்க வழக்கறிஞர் சந்திரசேகர், வடவல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சங்கர், வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் முருகன், இயேசு விடுவிக்கிறார் ஊழிய விவசாயத்துறை பொறுப்பாளர், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், விவசாய பணிகள் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ லெட்சுமி, மணத்தி எட்வின் மற்றும் வல்லநாடு கஸ்பா, கலியாவூர் பஞ்சாயத்து, முறப்பநாடு, அகரம், கோவில் பத்து உள்ளிட்ட கிராம பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

தமிழன்மே 25, 2022 - 12:16:14 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்.இது போல் எவ்வளவோ நல்ல பணிகள் உள்ளது தொடருங்கள்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory