» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இந்தோனேசிய சிறையில் குமரி மீனவர் உயிரிழப்பு: அமைச்சர், எம்.பி. இறுதி அஞ்சலி!

செவ்வாய் 24, மே 2022 5:02:46 PM (IST)



இந்தோனேசிய சிறையில் உயிரிழந்த குமரி மீனவர் உடலுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி.  ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த ஜெனோபாவின் மகன் மரிய ஜெசின்தாஸ் (33). இவர் உள்பட 4 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி இந்தோனேசியா கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக கடலோர காவல் படையினர் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் உடல் நிலை மோசமடைந்தை அடுத்து மரிய ஜெசின் தாஸ் இந்தோனேசிய சிறையில் உயிரிழந்தார்.

அவரது உடல்  இந்தோனேசியா வில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சொந்த ஊரான தூத்தூருக்கு எடுத்து செல்லப்பட்டது இந்நிலையில் உயிரிழந்த மீனவர் ஜெசின்தாஸ் உடலுக்கு, குமரி தொகுதி எம்.பி.  விஜய்வசந்த், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் முக்கிய தலைவர்கள் பிரமுகர்களும்   நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜெசின்தாஸ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory