» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம்

செவ்வாய் 24, மே 2022 4:57:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் 40 தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையங்களில் அடுத்த மாதம் 30-ந் தேதி வரை "ஆதார் தமாகா” முகாம் நடைபெறுகிறது. 

இது தொடர்பாக குமரி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: குமரி மாவட்டத்தில் 40 தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாகர்கோவில் தலைமை தபால் நிலையம், தக்கலை தலைமை தபால் நிலையம், குழித்துறை, மார்த்தாண்டம், நெய்யூர், கோட்டார், கருங்கல் உள்பட 40 தபால் நிலையங்களில் பொதுமக்கள் இந்த சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அஞ்சலக ஆதார் சேவை மையங்களில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணங்கள் எதுவும் இல்லை. பெயர், வீட்டு முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்ற திருத்தங்களுக்கு கட்டணம் ரூ.50-ம், கைேரகை, கண் கருவிழி உள்ளிட்ட விவரங்களை திருத்தம் செய்ய கட்டணம் ரூ.100-ம் வசூலிக்கப்படும்.

இந்த முகாம் கடந்த 17-ந் தேதி முதல் அடுத்த மாதம் 30-ந் தேதி வரை "ஆதார் தமாகா” என்ற பெயரில் நடைபெறுகிறது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், மற்ற தபால் நிலையங்களில் அலுவலக நேரத்திலும் ஆதார் சேவையைப் பெற முடியும். மேலும் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் விரைவு தபால் சேவையும் பொதுமக்கள் நலன் கருதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள் ளது. இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory