» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி பள்ளி மாணவர்களுக்கு டிஜிபி பாராட்டு!

செவ்வாய் 24, மே 2022 9:57:34 AM (IST)

தூத்துக்குடி பள்ளி மாணவர்களின் சேவையை பாராட்டி தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு  பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் வகுப்பறை பெஞ்ச், டெஸ்க், கரும்பலகைகளுக்கு பெயிண்ட் அடித்து சேவை செய்த‌ செய்தி வலைதளங்களில் வைரலாக பரவியது. அப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

தற்போது தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு  பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். "தமிழகத்தில் சமீப காலமாக மாணவர் சமுதாயம் குறித்து மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, தாக்க முற்படுவது, இருக்கைகளை உடைப்பது, போதை வஸ்துக்களை அருந்துவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த செயல்கள் ஆசிரியர்கள்,பெற்றோர் மற்றும் காவல்துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், அதற்கு நேர்மாறாக தூத்துக்குடி பெருமாள்புரத்தில் உள்ள பாரதியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்களது செயல்பாடுகள் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் பயிலும் வகுப்பறைகளை தங்களுக்கு பின்னர் வரும் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் வகுப்பறை, மேஜைக்கு வண்ணம் தீட்டுவது, இருக்கைகளை சரி செய்து கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு முன்மாதிரியாக விளங்குகின்றனர். 

தங்கள் வகுப்பறையை சீரமைப்பது குறித்த முடிவை எடுத்து தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்து அவர்களின் ஒப்புதலோடு இந்த நற்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தலைமை ஆசிரியராகிய நீங்களும் உங்களது சிறந்த முயற்சியால் ஏற்கனவே மாணவச் சமுதாயத்தின் மேல் இருந்த ஒரு தவறுதலான கருத்தை மாற்றியுள்ளீர்கள். அந்த வகையில் நீங்கள் இன்றைய மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் நல் மாற்றத்தை உருவாக்கும் ஒரு கருவியாக செயல் பட்டுள்ளீர்கள்.



இன்றைய மாணவச் சமுதாயத்தின் மேல் உருவாகியுள்ள தவறான கருத்தை மாற்றியமைக்க முற்பட்ட பாரதியார் வித்யாலயம் தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் மற்றும் மாணவச் செல்வங்களையும் மனதார பாராட்டுகிறேன். இந்தச் செயல் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவனின் மனதையும் தொடும் என்றும் நம்புகிறேன். இந்தச் செயலில் ஈடுபட்ட ஒவ்வொரு மாணவனின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்" என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அப்பள்ளியின் செயலர் ஏ.பி.சி.வீ.சண்முகம் இச்சேவையில் ஈடுபட்ட மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, வரலாற்று ஆசிரியர் சுபாஷ் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

VeerabadranMar 11, 2023 - 09:26:11 AM | Posted IP 162.1*****

Super great kudos to students HM teachers Management

Veerabadran MuruganMar 11, 2023 - 09:25:22 AM | Posted IP 162.1*****

As a student of this school I feel very proud of these school atudents teachers Management They have also set an example of taking those students by flight from Tuticorin to Chennai as those students attend the class without taking any leave for the whole year .these motivates other students to attend to school promptly without taking any leave to concentrate on their studies Gudos to the entire students who actually did this happened Veera Old student veera Subbiah vidyalaya boys high school Tuticorin

தமிழன்மே 24, 2022 - 11:42:05 AM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்! அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் இது போன்ற நற்செயலில் ஈடுபட ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் .

P Mutharasu, Coimbatoreமே 24, 2022 - 11:22:16 AM | Posted IP 162.1*****

Bharathiyar Vidyalayam students are role model for all schools in TN. Congrats to the HM Mr Dakshanamoorthy and other teachers for their motivation. Keep your selfless service

AJITHமே 24, 2022 - 10:08:49 AM | Posted IP 162.1*****

Paaratukkal anaivarukum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory