» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் படகு போக்குவரத்து மீண்டும் துவக்கம் - சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்!

சனி 21, மே 2022 3:41:57 PM (IST)

உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் இன்று பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். 

உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான குமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரிக்கு வருவார்கள். இன்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இன்ற அதிகாலையில் சூரிய உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குமரி கடலில் அதிகாலையில் சூரிய உதயமான காட்சி மேகமூட்டம் காரணமாக தெளிவாக தெரியவில்லை.

பின்னர் முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். அதனைத் தொடர்ந்து பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் குமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட காலை 7 மணியிலிருந்து சுற்றுலா பயணிகள் படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு திரும்பினர்.

கடந்த ஒரு வாரமாக படகு போக்குவரத்து கடல் நீர் மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் தாமதமாக தொடங்கியது. இன்று சரியாக 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. குமரியில் உள்ள சுற்றுலாத்தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உட்பட அனைத்து இடங்களிலும் காலையிலிருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கடற்கரையில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory