» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் ஹாக்கிக்கு புத்துயிர் அளிக்க முயற்சி: மாணவர்களுக்கு முன்னாள் வீரர்கள் பயிற்சி!

செவ்வாய் 18, ஜனவரி 2022 8:27:48 PM (IST)



தூத்துக்குடி மண்டலத்தில் ஹாக்கி விளையட்டிற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு முன்னாள் வீரர்கள் இலவச பயிற்சி அளித்து வருகின்றனர். 

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெயர் பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியும் ஒன்று.  இதுபோல் தூத்துக்குடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரபலமாக இருந்த ஹாக்கி விளையாட்டு வீழ்ச்சியடைந்தது. இதனை மீட்டெடுக்கும் வகையில் முன்னாள் ஹாக்கி வீரர்கள் இணைந்து பிரேவ் வாரியர்ஸ் ஹாக்கி கிளப் என்ற பெயரில் ஒரு குழுவினை உருவாக்கி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். 

இதுகுறித்து பிரேவ் வாரியர்ஸ் கிளப் நிர்வாகிகள் கூறுகையில், தூத்துக்குடியில் ஹாக்கியை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம். தற்போது 70பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். வ.உ.சி., கல்லூரி அணி, காமராஜ் கல்லூரி மற்றும் பல்வேறு பள்ளி அணிகளையும் உருவாக்கியுள்ளோம். உரிய முறையில் பயிற்சி அளித்து திறமையான வீரர்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்.



எங்களது முயற்சிக்கு தூத்துக்குடி துறைமுக ஹாக்கி விளையாட்டு வீரர்களும், வஉசி சிதம்பரனார் கல்லூரியின் முன்னாள் விளையாட்டு வீரர்களும், கோவில்பட்டி ஹாக்கி விரர்களும், தூத்துக்குடி எஸ்.ஏ.வி., மற்றும் சேவியர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர்களும்,  வளரும் ஹாக்கி வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஹாக்கி மட்டை, பந்து மற்றும் ஹாக்கி மைதானத்தையும் செம்மைப்படுத்தி உதவி வழங்கி உள்ளார்கள்" என்று தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

SANJAI SJan 20, 2022 - 06:45:10 PM | Posted IP 162.1*****

Salute🙏🏻

saranJan 19, 2022 - 07:41:30 AM | Posted IP 162.1*****

best wishes

பாலமுருகன்Jan 18, 2022 - 09:34:51 PM | Posted IP 162.1*****

மேன் மேலும் வளர்ந்து சிறப்பான விரர்களை உருவாக்க வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory