» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேஸ்புக் மூலம் ஆண் போல பழகி சிறுமி கடத்தல்: இளம்பெண் கைது - பரபரப்பு தகவல்!

செவ்வாய் 18, ஜனவரி 2022 4:27:20 PM (IST)

பேஸ்புக் மூலம் ஆண் போல பழகி சிறுமியை கடத்திய இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். 

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரா பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி. அதேபகுதியில் இயங்கி வரும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ஆண் நண்பர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் நன்றாக பழகி வந்த நண்பர், ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி ஏமாற்றி கடத்தி சென்று உள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கடத்தி சென்றவரை சைபர்போலீசார் உதவியுடன் வலைவீசி தேடிவந்தனர். அப்போது, கடத்தபட்ட சிறுமி திருச்சூரில் இருப்பதாக தகவல் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று திருச்சூர் நகரிலிருந்து சந்தியா என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையின் போது, அவர் ஆண் வேடம் அணிந்த பெண் என்பதும், இவர் திருவனந்தபுரம் மாவட்டம் வீரன்னபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பதும், இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் சமூக வலைதளங்களில், ஆண் வேடத்தில் தோற்றமளித்து சிறுமிகளை கடத்தி ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சந்தியாவை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 


மக்கள் கருத்து

adaminJan 20, 2022 - 01:15:41 PM | Posted IP 192.8*****

akka enakkum training kudu ka

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory