» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நேரடி பயிற்சிகளை கல்வித்துறை கைவிட வேண்டும்: தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி!

செவ்வாய் 18, ஜனவரி 2022 8:16:57 AM (IST)

கரோனா பெரும்தொற்று காலத்தில்   நேரடி பயிற்சிகளை கல்வித்துறை கைவிட  வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட வட்டார கல்வி அலுவலகம் முன்பு 21ஆம்தேதி  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்  கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கை : ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான  ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு வழங்கி வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு மீண்டும் வழங்கப்பட வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ஆம்தேதி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்  மாநில செயற்குழு முடிவின்படி  மாநிலம் முழவதும் வட்டார கல்வி அலுவலகம் முன்பு  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. 

2019இல் ஜனவரி நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக பணி மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களை கலந்தாய்வு முன்பாக அதே இடத்தில் பணியில் அமர்த்திட வேண்டும். கரோனா பெரும்தொற்று காலத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்  நேரடி பயிற்சிகளை கல்வித்துறை கைவிட வேண்டும்   உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சமுக இடைவெளியுடன் கரோனா நோய் தொற்று வழிக்காட்டுதளை பின்பற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தார்.  


மக்கள் கருத்து

வெண்டியா பதிவை போடுகிறவர்களை கண்டிக்கும் சங்கம்Jan 18, 2022 - 05:48:28 PM | Posted IP 162.1*****

வென்டி பயலுகளா அவங்க சும்மா இருக்காங்கனு நேரில் போய் பாத்தியால அரசாங்கமே மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டுங்கு அதுக்கு இவங்க என்ன செய்வாங்க வேலை இல்லாத பட்டதாரிகள் வேலைக்கு வந்ததும் அவர்களும் இதே நிலைமையிலேதான இருப்பாங்க . இப்படி பதிவு போட்டு மக்கள் மத்தியில் கேவலமாக இருக்கிற நிலைமையை உருவாக்குறீங்க. எந்த ஆபீசராக இருந்தாலும்இந்த ஆசிரியர்கள் தான் கற்று தந்த பாடம்தாலே . புரிஞ்சி பதிவை போடுங்க. எந்த ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்கள் பணியை செய்யதான் செய்கிறார்கள். அவர்கள் மீது வீன் பழியை சுமத்துவதை விடுத்து மதிப்பு கொடுக்கணும். இதுக்கு கேவலமா பதிவை போட்டால் நீ ரத்தம் கக்கிவாய் ! ஜக்கம்மா சொல்லிபுட்டா ஆமா !

kumarJan 18, 2022 - 01:23:48 PM | Posted IP 162.1*****

COrona kaalakattathil arpattam nadathamudiyum...aanal ungalal palliku vathu paadam nadatha mudiyatha??

திராவிடம் வளர்த்த சோம்பேறிJan 18, 2022 - 01:07:08 PM | Posted IP 108.1*****

சோம்பேறி .. பிரைவேட் பள்ளியில் ஆசிரியர்கள் எல்லா வேளையிலும் கடுமையாக உழைக்குறாங்க. இவனுங்க பண கொழுத்த சோம்பேறிகள்..

BalaJan 18, 2022 - 09:49:35 AM | Posted IP 173.2*****

நீங்க அப்படியொண்ணும் வேலை பார்த்து கிழிக்க வேண்டாம் வி ஆர் எஸ் வாங்கிட்டு வீட்டுக்கு போங்க நிறைய பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இல்லாமல் இருக்காங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory