» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு

திங்கள் 17, ஜனவரி 2022 4:53:09 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம், கான்கிரீட் சாலைகள், மழைநீர் வடிகால்கள், பூங்காக்கள் உட்பட  சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மழையின் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. 

மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன நிலையில் தற்போது இந்த பணிகளை விரைவு படுத்துவதற்காக தமிழக அரசின்  நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். அவர்கள், மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பேருந்து நிலையம் விரிவாக்க பணிகள், ஜெயராஜ் ரோடு பகுதியில் மல்டி லெவல் கார் பார்க்கிங், சி.வ.குளம் தூர்வாரி ஆழப்படுத்தி பலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து

SudhakarJan 19, 2022 - 05:33:12 AM | Posted IP 173.2*****

VMS Nagar சாலை வேலைகள் பாதியில் நிற்கிறது. மேலும் மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் உள்ளது பூங்கா பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன பணிகள் நின்று போயுள்ளனர். தெருவிளக்குகள் வசதியும் இல்லை.

முதல்ல அது தான் முக்கியம்Jan 18, 2022 - 07:50:37 AM | Posted IP 162.1*****

ஊரெல்லாம் தோண்டி தோண்டி மாநகராட்சி அமைத்த கால்வாயில் சாக்கடை அப்படியே கிடைக்குது நீரில் நிறம் மாறி நிலத்தடிநீர் விஷமாக மாறவாய்ப்புள்ளது, அதை உருப்படாமல் வெளியேறாமல் இருக்கு அதை வெளியேற சரிபண்ணுங்க நீண்டகாலமாக பிரச்னை அது தான்..

தமிழன்Jan 17, 2022 - 06:36:30 PM | Posted IP 162.1*****

முத்து நகர் கடற்கரை பணிகள் அப்படியே உள்ளது .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory