» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழக அரசு சாலைப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
திங்கள் 17, ஜனவரி 2022 3:55:55 PM (IST)

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சாலைப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் இன்று (17.01.2022) துவக்கி வைத்து, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட சாலைகள், குளங்கள், கால்வாய்கள், உள்ளிட்டவைகளை சீரமைக்கும் பணிகளுக்காக பிற மாவட்டங்களை காட்டிலும் கூடுதல் நிதியினை நமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில், பணிகள் முழு வீழ்ச்சில் நடைபெற்று வருகிறது.
அதன்ஒரு பகுதியாக, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தேரோடும் ரதவீதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும். தேரை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வடம் பிடித்து இழுப்பார்கள். தேரோடும் நான்கு ரத வீதி சாலைகள் பழுதடைந்த நிலையில் குண்டும், குழியுமாக இருப்பதாக பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில்,
அக்கோரிக்கையை தமிழக அரசு ஏற்று தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் சாலை சீரமைக்கும் பணி மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் பணியினையும், 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின்கீழ் ரூ.28 இலட்சம் மதிப்பில் பூங்குளத்துவிளை சாலை சீரமைக்கும் பணி என மொத்தம் ரூ.1.78 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் சாலை சீரமைக்கும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பணிகளும் அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிதியினை பெற்று வெகுவிரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சாலைப்பணிகளுக்கென அதிக முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்துப்பணிகளும் மிகவும் தரமானதாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், கன்னியாகுமரி செயல் அலுவலர் ஜீவனாதன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எஸ்.அழகேசன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பிரேமலதா, அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை குழுத்தலைவர் தாமரைபாரதி, குமரி ஸ்டீபன், .பசலியான், வழக்கறிஞர் சதாசிவம், முத்துசாமி, நாஞ்சில் மைக்கேல், செந்தில் முருகன், அம்மு ஆன்றோ, சந்திரசேகர், காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)
