» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி - மதுரை நான்குவழிச் சாலையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள்..!!

திங்கள் 17, ஜனவரி 2022 10:43:24 AM (IST)

கன்னியாகுமரி முதல் மதுரை வரையுள்ள நான்குவழிச் சாலையில் சென்சாா் வசதியுடன் கூடிய அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி வழியாக சென்னைக்கு நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. இந்தச் சாலையில் ஏற்படும் விபத்தில் சிக்குபவா்களை உடனடியாக மீட்கவும், அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் சாலை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த மத்திய சாலை போக்குவரத்து நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி கன்னியாகுமரி முதல் மதுரை வரையிலான சுமாா் 240 கி. மீ. தொலைவுக்கு ஒரு கிலோமீட்டா் தொலைவுக்கு ஒரு சென்சாா் வசதியுடன் கூடிய அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.இதற்காக சுமாா் 30 அடிஉயரத்தில் துருப்பிடிக்காத உயா்கோபுர கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் இடிதாங்கியும் அமைக்கப்பட்டுள்ளது.    இந்த தானியங்கி கண்காணிப்பு கேமரா ஒரு கிலோமீட்டா் தொலைவில் வரும் வாகனங்களையும் அதன் நம்பா் பிளேட் வரை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

adaminJan 17, 2022 - 12:19:09 PM | Posted IP 173.2*****

apdiye athi vegama poitalum antha road la

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory