» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தைப்பூச இருமுடி விழா: செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் தொடக்கம்!
புதன் 8, டிசம்பர் 2021 8:39:33 PM (IST)

தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூருக்கு தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இருமுடி விழா டிசம்பர் 13ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. தைப்பூச இருமுடி விழாவில் கலந்துகொள்ள தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களில் இருந்து செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிச்செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.
சக்தி மாலை அணியும் நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் சக்திமுருகன் தொடங்கிவைத்தார். தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், உடன்குடி, ஓட்டப்பிடாரம், கடம்பூர், கோவில்பட்டி, மந்திதோப்பு, விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், முத்துசாமிபுரம், எட்டையபுரம், கழுகுமலை, பிள்ளையார்நத்தம் உட்பட மாவட்டம் முழுவதும் சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி தொடங்கியது. சக்தி மாலை இருமுடிகட்டிச் செல்லவிரும்பும் பக்தர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் / சக்தி பீடங்களை தொடர்புகொள்ளலாம். அதிவேக இரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல தெற்கு இரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க துணைத்தலைவர் பண்டார முருகன், செயலாளர் செந்தில் சுப்ரமணியன், பொருளாளர் கண்ணன், மகளிர் அணி பத்மாவதி, வேள்விக்குழு கிருஷ்ண நீலா, இளைஞர் அணி செல்லத்துரை, தணிக்கை குழு வேலு, பிரச்சாரம் முத்தையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)

