» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உரிமம் இல்லாமல் செயல்பட்ட டீக்கடைகள் மூடல்

புதன் 8, டிசம்பர் 2021 10:11:06 AM (IST)

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் இல்லாமல் செயல்பட்ட தேநீா் கடைகள் மூடப்பட்டன.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டபோது, ஆவின் பாலகம், ஆண்ட்ரூ தேநீா் கடை ஆகியவை உரிமம் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டு அவை மூடப்பட்டது. அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் இணையத்தளத்தில் உரிமத்துக்கு விண்ணப்பித்ததால் கடைகளை இயக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன் கூறுகையில், உணவு வணிகா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை  இணையத்தளத்தில் மட்டும் விண்ணப்பித்து, உரிமம் பெற்ற பின்னரே உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட உணவு வணிகத்தை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கடைகளின் இயக்கத்தினை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

Dec 8, 2021 - 03:15:21 PM | Posted IP 108.1*****

சில கடைகள் உரிமை இருந்ததும் சுத்தமாக இல்லை

PUBLICDec 8, 2021 - 02:30:04 PM | Posted IP 173.2*****

PLEASE COME IN SPRPRISED VISIT TO KOOTAMPULI, PUTHUKOTTAI -தேநீா் கடை ஆகியவை உரிமம் இல்லாமல் ULLATHU.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory