» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலி : காவல் நிலையத்தில் உறவினர்கள் முற்றுகை!
செவ்வாய் 7, டிசம்பர் 2021 10:41:47 AM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது காவல்துறை வாகனம் மோதிய விபத்தில் ரோடு ரோலர் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமணி மகன் முத்துசெல்வம் (63). கோரம்பள்ளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரோடு ரோலர் ஆப்ரேட்டராக வேலைபார்த்து வருகிறார். இன்று காலை பைக்கில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி 3வது மைல் பாலம், எப்.சி.ஐ., குடோன் அருகே சென்றபோது, தூத்துக்குடி ஆயுதப்படை அலுவலத்தில் இருந்து எஸ்பி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் அவரது பைக் மீது மோதியது.
இதில் நிலைடுமாறி போலீஸ் வாகனத்தின் பின்சக்கரத்தின் சிக்கிய முத்து செல்வம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தினை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், டவுண் டிஎஸ்பி கணேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து, போலீஸ் வாகனத்தை ஓட்டிவந்த மதுரை அலங்காநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜபாண்டி என்ற காவலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த முத்துசெல்வத்தின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தென்பாகம் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மக்கள் கருத்து
testDec 7, 2021 - 04:41:21 PM | Posted IP 162.1*****
Tamil
இந்த உலகம் அப்படிதான்Dec 7, 2021 - 12:04:08 PM | Posted IP 108.1*****
டிரைவர் காவலராக இருந்தாலும் தண்டனை கிடையாது உண்மை ..
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)


மக்கள்Dec 8, 2021 - 11:39:00 AM | Posted IP 162.1*****