» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குளச்சல் அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

செவ்வாய் 7, டிசம்பர் 2021 8:21:01 AM (IST)

குளச்சல் அருகே திமுக பிரமுகரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பன்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் குமாரசங்கர். இவர் திமுக பிரமுகராக உள்ளார். இந்நிலையில் இவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குளைச்சல் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்களால் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory