» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தொழிலதிபரின் மனைவி கள்ளக்காதலனுடன் மீண்டும் ஓட்டம்
செவ்வாய் 30, நவம்பர் 2021 11:13:13 AM (IST)
மார்த்தாண்டம் அருகே கள்ளக்காதலனுடன் மீண்டும் இளம்பெண் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் பழைய கார் வியாபாரி. இவருடைய மனைவி (35) கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென்று இரவில் மாயமானார். அப்போது அவர் ரூ.13 லட்சம் மற்றும் 45 பவுன் நகைகளுடன் வீட்டில் இருந்த ஒரு சொகுசு காரையும் எடுத்துக் கொண்டு மாயமானார்.மேலும் தனது மகளையும் தன்னுடைய அழைத்து சென்றிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய கணவர் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரை தனிப்படை போலீசார் கேரளா உள்ளிட்ட பல இடங்களில் 1½ மாதமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த பெண் டெல்லியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரித்ததில் அந்த பெண் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தியது தெரியவந்தது.பின்னர் அந்த பெண்ணையும், அவரது மகளையும், கள்ளக் காதலனையும் மீட்டு வந்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் மீண்டும் கணவருடன் அந்த பெண் சென்றார்.
அவரது கள்ளக்காதலனையும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அந்த பெண் மீண்டும் தற்போது மாயமாகி உள்ளார். இது அவரது கணவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீண்டும் கள்ளக்காதலனுடன் அவர் சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐப்பசி பௌர்ணமி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:42:47 PM (IST)

இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றும் திமுக: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!
வியாழன் 6, நவம்பர் 2025 12:46:41 PM (IST)

கழகத்தை காக்க சின்னம்மாவை அழைத்து வாருங்கள் : நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:02:51 AM (IST)

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!
புதன் 5, நவம்பர் 2025 12:53:45 PM (IST)

ரயில் நிலையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது வழக்கு: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி!
புதன் 5, நவம்பர் 2025 12:37:01 PM (IST)


.gif)