» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் மோடி, அமித்ஷா உருவ படம் எரிப்பு : பெண் உட்பட 20பேர் கைது

வெள்ளி 15, அக்டோபர் 2021 11:47:51 AM (IST)



தூத்துக்குடியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் உருவ படங்களை எரித்து போராட்டம் நடத்திய 20பேரை போலீசார் கைது செய்தனர். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். உபியில் விவசாயிகள் படுகொலைக்கு காரணமான உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றோரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகம்மது இக்பால் தலைமையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாரிசெல்வம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கிருஷ்ணமூர்த்தி,  ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் மகேஸ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உருவ பொம்மைகளுடன் தூத்துக்குடியில் தந்தி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களிடம் இருந்து உருவ பொம்மைகளை பறிமுதல் செய்தனர்.

அப்போது போராட்டம் நடத்தியவர்கள் திடீரென மோடி மற்றும் மற்றும் அமித்ஷாவின் உருவ படங்களை எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபர்பபு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 20பேரை மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், டவுண் டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுட்டனர். 


மக்கள் கருத்து

TAMILARKALOct 15, 2021 - 12:53:55 PM | Posted IP 108.1*****

இந்த நாலு பேருக்கும் வேற வேலையில்லயா? பிரியாணி ரெடி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory