» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொன்மனை முதல் வெண்டலிக்கோடு ரூ.2.52 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகள் துவக்கம்!

வியாழன் 14, அக்டோபர் 2021 12:11:31 PM (IST)பொன்மனை முதல் வெண்டலிக்கோடு வரையில் ரூ.2.52 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பொன்மனை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (2020-2021) கீழ் ரூ.2.52 கோடி மதிப்பில் பொன்மனையிலிருந்து ஈஞ்சக்கோடு வழியாக வெண்டலிகோடு வரை 3.20 கி.மீ அளவிலான சாலை விரிவாக்க பணியினை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (13.10.2021) துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் (நெடுஞ்சாலை மற்றும் கட்டமான பணிகள்) பொறி.தனசேகர், ஜெ.எம்.ஆர்.ராஜா, ஜோஸ், அலாவுதீன், சுரேஷ், பி.கிறிஸ்துதாஸ், டெய்சி ஏசுதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory