» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொரோனா தடுப்புசி செலுத்திய 22 நபர்களுக்கு தங்க காசு பரிசு : ஆட்சியர் வழங்கினார்!

புதன் 13, அக்டோபர் 2021 5:45:34 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்புசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திய 22 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தங்க காசுகளை வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.10.2021) அன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 நபர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க காசுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (13.10.2021) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தெரிவிக்கையில் "கொரோனா மெகா தடுப்பூசி முகாம் கடந்த ஞாயிறுக்கிழமை (10.10.2021) அன்று நடைபெற்றது. அதில் 9 ஊராட்சி ஒன்றிய பகுதி மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் நபர்களில் அதிர்ஷ்டசாலியான 20 நபர்களுக்கு (ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தலா 2 நபர்கள், மாநகராட்சி 2 நபர்கள்) மற்றும் மாவட்ட அளவில் 2 நபர்களுக்குமாக மொத்தம் 22 அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் குலுக்கல் முறையில் 22 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நன்கொடையாளர் உதவி மூலமாக இன்று தங்க காசுகள் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெறும் முகாம்கள் வாயிலாக இதுநாள்வரை முதல் மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்புசி செலுத்தாத 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்புசி செலுத்தி, நமது மாவட்டம் 100 சதவீதம் தடுப்புசி செலுத்திய மாவட்டமாக மாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ச.சா.தனபதி, பொன்ஜெஸ்லி கல்வி குழும தலைவர் பொன் ராபர்ட் சிங், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சு.மீனாட்சி, சுகாதாரப் பணி ஆய்வாளர் சூரிய நாராயணன், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory