» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தொல்லியல் துறை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு : சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன் 13, அக்டோபர் 2021 4:49:18 PM (IST)



தொல்லியல் துறை படித்துள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பாக 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அகழாய்வு பணி கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு பணிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட வருகை தந்தார். அவர் தற்போது மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வரும் இடத்தினை பார்வையிட்டார். அவருக்கு அகழாய்வு பணிகள் குறித்து ஆய்வாளர் ராஜன் விளக்கமளித்தார். மேலும் அகழாய்வு பணிகளில் அருங்காட்சியகம் அமைய உள்ளது குறித்தும் விளக்கமளித்தார். அதன்பின்னர் மாநில அரசு கடந்த ஆண்டு அகழாய்வு பணியில் கண்டுபிடித்த பொருட்களையும் அவர் பார்வையிட்டார். 

அதுகுறித்து தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி விளக்கமளித்தார். அதன்பின்னர் அவர் பேட்டியில் தெரிவிக்கையில், அகழாய்வு பணிகளில் கிடைத்த பொருட்களை பார்க்கின்ற பொழுது பண்டைய தமிழ் சமூக ஒரு நீண்ட நெடிய வரலாற்று பாரம்பரியம் கொண்டது என்பதை உணர முடிகிறது. மாநில அரசு சார்பில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியகத்தையும், மத்திய அரசு சார்பில் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். கடந்த காலங்களில் ஆதிச்சநல்லூரில் வெளிநாட்டினர் நடத்திய அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் ஏராளமானவை வெளிநாடுகளில் உள்ளது. 

அதனை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிச்சநல்லூரில் கிடைக்கின்ற பொருட்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே நமது மக்கள் எவ்வளவு விஞ்ஞான அறிவு பெற்றுள்ளனர் என்பதை என்பதை பார்க்க முடிகிறது. தற்போது தொல்லியல் துறை என்பது மனிதனின் வாழ்வில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இவர்கள் மூலமாகத்தான் நமது பழங்கால சமூகம் எப்படி வாழ்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்த தொல்லியல் துறை படித்துள்ள மாணவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படிப்பை விரிவுப்படுத்தவும், படித்துள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை விரிவுப்படுத்தினால் நமது தமிழ் மக்களின் பாரம்பரியத்தை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். 

ஏனென்றால் ஒரு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு வரலாறே கிடையாது என்றும், வட பகுதியில் இருந்து தான் வரலாறு எழுதப்படுகிறது சிந்துசமவெளி, ஆரிய நாகரீகம் தான் என்று சொல்லிய நிலையில், அதை மாற்றி அதற்கு முன்னர் தமிழ் மக்கள் தொழில் நுட்பத்துடன் வாழ்ந்துள்ளார்கள் என்பதை இந்த அகழாய்வுகள் நமக்கு பெரிய அளவில் உதவிகள் செய்துள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. என்று தெரிவித்தார். அவருடன்  மாநில செயற்குழு உறுப்பினர்  எம்.என்.எஸ். வெங்கட்ராம், மாவட்டட செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், பேச்சிமுத்து, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர்  நம்பிராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

kumarOct 15, 2021 - 01:00:55 PM | Posted IP 162.1*****

yar sonnargal thamilnattu makkaluku varalare kidayathu endru?? thamilagathil ulla anaithu palaya hindu kovilgalum thamilan nagarigathin adayalame....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory