» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

செவ்வாய் 12, அக்டோபர் 2021 11:03:04 AM (IST)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை கொள்ளை அடிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  இதில் பங்கேற்று பேசிய அந்த கட்சியின் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 

இதைதொடர்ந்து, ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்பு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த சாட்டை துரை முருகனை நள்ளிரவில் நாங்குநேரி பகுதியில் வைத்து தக்கலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தக்கலைக்கு அழைத்து வந்து பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நீதிபதி தீனதயாளன் முன்பு ஆஜர் படுத்தினர். அப்போது அவரை வருகிற 25ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  கைது செய்யப்பட்டுள்ள சாட்டை துரைமுருகன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory