» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆன்லைனில் அளிக்கும் மனுக்கள் மீது முறையாக விசாரணை : பாஜக கோரிக்கை

செவ்வாய் 12, அக்டோபர் 2021 8:37:09 AM (IST)

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பொதுமக்களின் மனுக்கள் மீது முறையாக விசாரணை செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. 

வருவாய்த்துறை சாா்பில் பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்களான இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், ஓபிசி பிரிவு சான்றிதழ், பட்டா பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கு பொதுமக்கள் ஆன்லைன் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கிறாா்கள். ஆனால் வருவாய்த் துறை அதிகாரிகள் முறையான விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாகவே மனுக்களை தள்ளுபடி செய்துவிடுகின்றனா். ஆனால் விண்ணப்பித்த பொதுமக்கள் சான்றிதழ் பெற காலதாமதம் ஏற்படுவதோடு, பணவிரையமும் ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் விண்ணப்பித்த பொதுமக்களிடம் இருப்பிடத்திற்கு சென்று முறையாக விசாரணை செய்ய வேண்டும், கையூட்டு பெறுவதற்காகவோ அல்லது வேறு ஏதும் காரணத்திற்காகவோ மனுக்களை தள்ளுபடி செய்வதை தவிா்க்க முறையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக மாவட்டச் செயலா் வேல்ராஜா தலைமையில் இளைஞரணி மாவட்டத் தலைவா் காளிதாசன், மாவட்ட பொதுச்செயலா் அழகுமாரியப்பன் ஆகியோா் கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.


மக்கள் கருத்து

K.GANESHANOct 12, 2021 - 09:38:41 PM | Posted IP 173.2*****

Super.Good Demand.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory