» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

திங்கள் 11, அக்டோபர் 2021 11:32:54 AM (IST)



குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

ஆமாOct 12, 2021 - 08:08:37 AM | Posted IP 162.1*****

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு விற்கிறவன் யார் ?? கொத்தடிமைகள் தானே

TAMINADUOct 11, 2021 - 02:19:05 PM | Posted IP 173.2*****

கேரளா உங்க ஊருதானே ? பின்னாடியே போயி செட்டில் ஆகிற வேண்டியதுதானே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory