» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் அருகே ரூ.5கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரீஸ் பறிமுதல் : 5 பேர் கைது!!

வெள்ளி 8, அக்டோபர் 2021 5:37:30 PM (IST)



நாகர்கோவில் அருகே ரூ.5கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுங்கான் கடை பகுதியில் நேற்று இரவு சொகுசு காரில் வந்த கும்பல் ஒன்று அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டருகே நின்று கொண்டு தடை செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய பேரம் பேசி வருவதாக இரணியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த சொகுசு காரை சுற்றி வளைத்து அந்த காரில் இருந்த 5-நபர்களையும் அவர்கள் காரில் பதுக்கி வைத்திருந்த பொருளையும் மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த காரில் வந்தது சென்னை செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பதும் அவர் 5-கிலோ எடையுள்ள பல கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் வாந்தி எனப்படும் (ஆம்பர் கிரீஸ்) பொருளை சென்னையில் ஒரு நபரிடம் இருந்து சில லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கி தனது கூட்டாளிகளான தென்காசி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் ராமநாடு பகுதியை சேர்ந்த முகமது சுல்தான் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்த சில்வஸ்டார் வெர்ஜில் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து சுங்கான்கடை இந்திராகாலணி பகுதியை சேர்ந்த தனபாலன்., ரூத், தம்பதியருக்கு 5-கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டது தெரியவந்தது.

சுங்காங்கடை பகுதியில் அவர்கள் வீட்டருகே காரில் 5-கிலோ ஆம்பர் கிரீஸ் உடன் வந்து நின்று அந்த தம்பதியருடன் பேரம் பேசி வந்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தியும் இரணியல் போலீசாருக்கு அந்த ஆம்பர் கிரீஸ் உண்மை தன்மை தெரியவராத நிலையில் குழப்பமடைந்த அவர்கள் கைப்பற்றிய 5-கிலோ ஆம்பர் கிரீஸ் மற்றும் 5-நபர்களையும் வேளிமலை வனச்சரக அதிகாரி மணிமாறன் இடம் ஒப்படைத்ததோடு சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

அதோடு ஆம்பர் கிரீஸ்-ஐ வாங்க பேரம் பேசி போலீசாரை கண்டு தப்பியோடிய தனபாலன்-ரூத் தம்பதியரையும் போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் வேளிமலை வனச்சரக அதிகாரி மணிமாறன் அந்த 5-நபர்களிடமும் விசாரணை நடத்தியதோடு அவர்கள் மீது வனத்துறையால் தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் எனும் திமிங்கல வாந்தியை கள்ள சந்தையில் விற்பனை செய்ய முற்பட்டதாக அவர்கள் 5-பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ததோடு ஆம்பர் கிரீஸின் உண்மை தன்மை குறித்து அறிய ஆய்வக பரிசோதனைக்கும் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory