» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 23 மீனவர்கள் காயம்

வியாழன் 23, செப்டம்பர் 2021 11:37:13 AM (IST)

குமரி அருகே விசைப்படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 23 மீனவர்கள் மீட்கப்பட்டனர். காயம் அடைந்த அவர்கள் அரசு மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குமரி மாவட்டம், முட்டம் கிறிஸ்துராஜா நகரை சேர்ந்தவர் அர்த்தனாஸ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அர்த்தனாஸ் உள்பட 23 மீனவர்கள் நேற்று முன்தினம் காலை முட்டம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மதியம் முட்டத்தில் இருந்து 25 நாட்டிக்கல் மைல் தூரத்தில் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் திடீரென சூறைக்காற்று வீசியது. 

இதனால் அலைகள் 6 முதல் 12 அடி வரை எழுந்தது. மேலும் படகின் ஒரு பகுதியில் கடலில் பிடித்த மீன்கள் மற்றும் அவற்றை பதப்படுத்த பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளும் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் பாரம் தாங்காமல் விசைப்படகு ஒருபுறமாக சாய்ந்து கவிழ்ந்தது. படகில் இருந்த அர்த்தனாஸ் உள்பட 23 மீனவர்களும் காயம் அடைந்து கடலில் தத்தளித்தனர். உடனே அருகே மற்றொரு விசைப்படகில் வந்த மீனவர்கள், கடலில் தத்தளித்தவர்கள் அனைவரையும் மீட்டனர். 

மேலும் அவர்கள் வெறொரு விசைப்படகில் கரைக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். இதுபற்றி குளச்சல் கடலோர பாதுகாப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து கவிழ்ந்த படகை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்புபடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory