» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மது போதையில் பயணிகளை அவதூறாக பேசிய ரயில்வே ஊழியர் இடைநீக்கம்
செவ்வாய் 21, செப்டம்பர் 2021 4:13:03 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பணியின் போது மது போதையில் இருந்த ஊழியர், பயணிகளை அவதூறாக பேசியதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் கெபின் டிட்ஸ் (33). இவர் நேற்று முன்தினம் மாலை டிக்கெட் கவுண்டருக்கு டிக்கெட் எடுக்க வந்த பயணிகளை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதை பார்த்த பயணிகள் கெபின் டிட்ஸ் நடவடிக்கைகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து வந்து கெபின் டிட்சை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. எனவே கெபின் டிட்சை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது கெபின் டிட்ஸ் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கெபின் டிட்சை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் கெபின் டிட்சை ரயில்வே அதிகாரிகள் நேற்று பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர் மது போதையில் பயணிகளை அவதூறாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவட்டார் வட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 4:59:03 PM (IST)

மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் நினைவு தினம்: சார் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்
புதன் 17, டிசம்பர் 2025 4:27:00 PM (IST)

ரயில் கால அட்டவணையில் கோரிக்கைகள் நிறைவேறுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
புதன் 17, டிசம்பர் 2025 3:07:10 PM (IST)

குமரி மாவட்டத்தின் ரயில்வே திட்டங்கள் : மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 11:33:22 AM (IST)

குமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:03:31 PM (IST)

கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்த எஸ்.பி. ஸ்டாலினின் நிமிர் குழு.
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:00:16 PM (IST)


.gif)