» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

ஞாயிறு 19, செப்டம்பர் 2021 9:25:29 AM (IST)

கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள காந்தி நகா் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே இளைஞா் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், அவா் கோவில்பட்டி ஊருணி மேலத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மாரிச்செல்வம் (25) என்பதும், ஆன்லைன் மூலம் விளையாடி தந்தையின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து செலவழித்ததும், இதனால் அவரது பெற்றோா் கண்டித்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து

adaminSep 19, 2021 - 10:14:20 AM | Posted IP 162.1*****

online rummy is cheating dear fellow humans

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory