» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் 20ம் தேதி தி.மு.க கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் : அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை

சனி 18, செப்டம்பர் 2021 8:09:46 PM (IST)

தூத்துக்குடியில் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வருகிற 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளா் மற்றும் சமூக நலத்துறை அமைச்சா் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தி தலைமையில் 20.08.2021 நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்க்கட்சித் தலைவா்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், "மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு தொடருவது, விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு” உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத – ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பா் 20 முதல் 30-ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி ஒன்றிய பா.ஜ.க அரசின் செயல்களைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்து சுட்டணிக் கட்சிகளின் சார்பில் 20.09.2021 (திங்கட் கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டா்கள், அனைவரும் தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒருங்கிணைந்து போராடுவோம் மதசார்பற்ற – ஜனநாயக இந்திய குடியரசைப் பாதுகாப்போம்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

Sep 22, 2021 - 05:51:33 AM | Posted IP 173.2*****

வேஸ்ட் கட்சி

ப. சுகுமார்Sep 19, 2021 - 11:17:47 PM | Posted IP 162.1*****

ஆளுங்கட்சியினர் இப்படி மத்திய அரசுக்கு எதிராய் போராட்டம் நடத்தினால் மாற்று கட்சியினரும் ஆளும் திமுக அரசுக்கு எதிராய் போராடுவார்களே! பெட்ரோல் & டீசல் விலைக்கு எதிராய் அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். அதற்கு ஆளும் திமுக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும். அதற்கு தான் ஒவ்வொரு முறையும் தலைநகர் தில்லியில் ஜிஎஸ்டி சிறப்பு கூட்டம் நடைபெறுகிறதே! திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி போராடுவது ஒட்டு போட்ட மக்களை ஏமாற்றும் வேலை.

KARNARAJ RAMANATHANSep 18, 2021 - 10:15:41 PM | Posted IP 162.1*****

What action proposed/taken by DMK government through GST Council meeting. Why this TN, KERALA Government opposing to bring the petrol /diesel prices in GST (IN THIS GST TAX Max percentage possible only 28% against current total tax being collected now around 50%).

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory