» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இயேசு விடுவிக்கிறார் அறக்கட்டளை சார்பில் மரம் நடு விழா!
சனி 18, செப்டம்பர் 2021 3:21:07 PM (IST)

குரும்பூர் அருகிலுள்ள வடக்கு நல்லூரில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் புதுவாழ்வு சங்கத்தின் சமூக சேவை அமைப்பின் இயற்கை காப்போம் திட்டத்தின்கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வடக்கு நல்லூரில் மரம் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊர் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், விழா ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன் சி. லாசரஸ் பிரார்த்தனை ஏறெடுத்து மரக்கன்றை நட்டினார். விழாவில் கதிரவன், சரத்பாபு, நல்லூர் பஞ்சாயத்து எழுத்தர் முருகன்,ஏ.சி.எஸ்.கபாடி குழுவினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
ப. சுகுமார்Sep 19, 2021 - 11:32:53 PM | Posted IP 162.1*****
Good work.
ப. சுகுமார்Sep 19, 2021 - 11:28:49 PM | Posted IP 162.1*****
Good work.
மேலும் தொடரும் செய்திகள்

தக்கலையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வியாழன் 19, மார்ச் 2026 8:05:55 PM (IST)

குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.10.18 லட்சம் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 12:40:24 PM (IST)

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு
புதன் 18, மார்ச் 2026 12:31:24 PM (IST)


ப. சுகுமார்Sep 19, 2021 - 11:36:18 PM | Posted IP 162.1*****