» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி செப்.27-ல் முழு அடைப்பு: தமிழகத்தில் 1லட்சம் பேர் பங்கேற்பு

சனி 18, செப்டம்பர் 2021 12:45:19 PM (IST)

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி செப்.27இல் நடைபெறும் முழுஅடைப்புப் போராட்டத்தில் தமிழகத்தில் 1 லட்சம் போ் பங்கேற்பா் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

நாகா்கோவிலில் நேற்று அவர் செய்தியாளா்களிடம் கூறியது: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி 27 ஆம் தேதி (திங்கள்கிழமை) நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளிடமும் ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழகத்தில் சாலை மறியல், ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடைபெறும். இந்த போராட்டங்களில் 1 லட்சம் போ் கலந்து கொள்வா்.

தமிழகத்தில் கோயில் நிலங்களை குத்தகைதாரா்களிடம் இருந்து மீட்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். கோயில் நில குத்தகை பாக்கியினை வசூலிக்கஅரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய இட வசதியும் இல்லை. எனவே அரசு நெல் கொள்முதல் நிலையங்களை முறைப்படுத்த வேண்டும்.

ரப்பா் விலை வீழ்ச்சியடைந்துள்ளது; ரப்பருக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னாசிப்பழம், வாழைப்பழம் போன்றவற்றை பாதுகாப்பதற்கு குளிா்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும்.தனியாா் வன பாதுகாப்பு சட்டத்தால் குமரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த சட்டத்தால் விவசாயிகள் மரங்களை வெட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory