» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண்களிடம் செயின் பறித்த இளைஞா் கைது: 8 பவுன் தங்க நகைகள் மீட்பு

சனி 18, செப்டம்பர் 2021 12:38:28 PM (IST)

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதை யடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே இரணியல் காவல் ஆய்வாளா் தங்கராஜ், உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி ஆகியோா் தலைமையில் தனிப்படை

போலீஸாா் குருந்தன்கோடு பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடா்ந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.அவா் இரணியலை அடுத்த மொட்டவிளை பகுதியைச் சோ்ந்த மகாராஜன் (27) என்பதும், அவா் இரணியல் காவல் சரகம் வில்லுக்குறி பகுதியில் ராதிகாவிடம் 5 பவுன் தங்க சங்கிலி, வெள்ளிச்சந்தை காவல் சரகம் சடையால்புதூா் பகுதியில்

கண்மணியிடம் 3 பவுன் தங்க சங்கிலி, திங்கள்சந்தை அருகே எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டை உடைத்து ரூ. 53 ஆயிரம் திருட்டு, காரங்காடு பகுதியில் வின்சென்ட் ராஜ் என்பவா் வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 8 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory