» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேவாலயங்களில் திருவிழா திருப்பலிகளுக்கு அனுமதி இல்லை : ஆயர் ஸ்டீபன் அறிவிப்பு

சனி 18, செப்டம்பர் 2021 8:53:07 AM (IST)

தேவாலயத்தில் அக்.31 வரை வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் திருப்பலி, திருவிழாக்கள் கொண்டாட அனுமதியில்லை என தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர்  ஸ்டீபன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆயர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றின் 3-வது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அதன் பரவலைத் தடுக்கும் விதமாக, தமிழக அரசு மற்றும் நமது மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி, அக்டோபர் 31 வரை வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் திருப்பலி கொண்டாட்டத்திற்கும் மற்றும் திருவிழாக்கள் கொண்டாடவும் அனுமதியில்லை.  மற்ற நாட்களில் குறைந்த எண்ணிக்கையில் அரசாங்க விதிமுறைகளைக் கடைப்பிடித்து வழிபாடுகளை நடத்த அன்போடு வேண்டுகிறேன்" என ஆயர்  ஸ்டீபன் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சாஆ மான்யன் அவர்களுக்குSep 19, 2021 - 08:08:29 AM | Posted IP 162.1*****

பஸ் ஸ்டாண்ட் பக்கம் , கோயில் பக்கம் போய் பாருங்க முகக்கவசம் அணியாத மக்களே ஏராளம்...

சாமான்யன்Sep 18, 2021 - 08:58:30 PM | Posted IP 162.1*****

போன மாதமும் இதே சட்டம் தான் நடைமுறையில் இருந்தது. ஆனால் இவர்களால் மீறப்படுகிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory