» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் 71 கிலோ கேக் வெட்டி பிரதமர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சனி 18, செப்டம்பர் 2021 8:15:19 AM (IST)தூத்துக்குடியில்  71 கிலோ கேக் வெட்டி பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவை பாஜகவினர் கொண்டாடினர். 

பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்  இளைஞர் அணி சார்பாக இளைஞரணித் தலைவர் ஏஆர்ஏ விக்னேஷ் குமார் தலைமையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் 71 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பிபிஎஸ் பொன் குமரன் கலந்து கொண்டார். கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் ராஜேஷ் கனி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், தினேஷ், சுரேஷ், ராஜகோபா, ஹரி, தமிழ்ச்செல்வி, வணிக பிரிவு மாவட்ட செயலாளர் பொய் சொல்லான்,  வடக்கு மண்டல இளைஞரணித் தலைவர்  ஹரிஹரசுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

K.GANESHANSep 18, 2021 - 10:10:03 PM | Posted IP 162.1*****

Long live modiji. God bless you.💐🌹🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory