» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது: சுகாதாரப் பணிகள் தீவிரம்

புதன் 15, செப்டம்பர் 2021 4:20:19 PM (IST)

நாகர்கோவில் நகர பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

குமரி மாவட்டத்தில் தற்போது கரோனா இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் நகர பகுதிகளில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கோட்டார் பகுதியை சேர்ந்த 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 

அவர்கள் இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் கோட்டார் பகுதியில் வேறு யாருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory