» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திராவிட முப்பெரும் விழா: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்
செவ்வாய் 14, செப்டம்பர் 2021 5:30:04 PM (IST)

திராவிட முப்பெரும் விழாவை திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார்,
வருடந்தோறும் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளையும் இணைத்து செப்டம்பர் 15,16 மற்றும் 17 திராவிட முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இவ்வருடம் திமுக மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு முப்பெரும் விழாவினைத் தொடங்கி வைத்தார்.
அந்த காணொளியில் "பத்து வருடப் போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி, நல்லாட்சியாக மலர்ந்திருக்கிறது. இது மக்கள் விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுத்த ஆட்சி. பெரியாரின் கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றி, அறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சி கொள்கையினை நிலைநிறுத்தும் விதமாக CAA சட்டத்தை எதிர்த்தும், விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்தும் தீர்மானம் கொண்டு வந்து, ஒரு மாநிலத்தை, மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சி தான் ஆள வேண்டும் என்பதை மறுபடியும் வலியுறுத்தக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி அமைத்திருக்கிறது.
தலைவர் கலைஞரைப் போல எல்லோரையும் ஒன்றாக இணைத்து, எல்லோருக்கும் வாய்ப்புகளும், எல்லா மக்களுக்கும் உரிமைகளைத் தரக்கூடிய ஆட்சியாகவும் தளபதி அண்ணன் ஸ்டாலின் அவர்கள் நடத்தி வருகிறார். இத்தனை ஆண்டுகள் திராவிடம் நமக்குள் எந்த பாகுபாடும் இல்லை என்ற உணர்வையும், எல்லோருக்கும் உரிமை இருக்க வேண்டும், எல்லோர்க்கும் சுயமரியாதை இருக்க வேண்டும் என்ற உணர்வையும் விதைத்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்கும், இந்த திராவிடத்தை எப்படி எடுத்துச் செல்வது என்பது முக்கியம்.திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு உணர்வு, இயக்கம் என்பதையெல்லாம் தாண்டி, அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இவர்களெல்லாம், இந்த மண்ணில் விதைத்திருக்கக் கூடிய விருட்சம், என்றும் நம்மைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய கொள்கைகளை, அவர்களுடைய கனவுகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்குப் பெண்கள், இளைஞர்கள், இந்த சமூகத்திலே யார் யார்க்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகிறதோ அவர்கள் எல்லாம், ஒன்றிணைந்து தமிழ்நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அந்த பாதை "திராவிடம்" என்று பேசியிருக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

தமிழ்ச்செல்வன்Sep 14, 2021 - 08:28:33 PM | Posted IP 108.1*****