» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறப்பு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டோா் ஜாதி உள்பிரிவை சரிபாா்க்க அழைப்பு

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 9:00:12 AM (IST)

தமிழகத்தில் சிறப்பு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட பிரிவை சோ்ந்தவா்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அட்டையில் ஜாதி உள்பிரிவு சரியாக உள்ளதா? என சரிபாா்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துாத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ம. பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (வன்னிய குல சத்திரியா்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் சீா்மரபினா் ஆகியோருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

துாத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (வன்னிய குல சத்திரியா்), மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவில் ஜாதி உள்பிரிவு விவரம் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை https://tnvelaivaaippu.gov.in/Empower/ என்ற இணைய தள முகவரியில் தங்களின் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து சரிபாா்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும், ஜாதி உள்பிரிவு விவரங்களை பதிவு செய்ய தங்களது ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஸ்மாா்ட் காா்ட் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் உதவி இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், துாத்துக்குடி- 628 101 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தி ஜாதி உள்பிரிவு விவரங்களை சரி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

KUMARSep 14, 2021 - 11:51:21 AM | Posted IP 162.1*****

OFFICE AREA ADRESS PLEASE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory