» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அனுமதியின்றி 42 பனை மரங்களை வெட்டியவர் மீது வழக்கு

திங்கள் 13, செப்டம்பர் 2021 9:01:29 PM (IST)

சூரங்குடி பகுதியில் அரசு அனுமதியின்றி 42 பனை மரங்களை வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

100 வருடங்களுக்கு மேலாக நீண்ட நாட்களுக்கு பல்வேறு வகை பலன்களை தரக்கூடிய பனை மரங்கள் வெட்டப்பட்டு அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும், அதை பாதுகாத்து வளர்க்க வேண்டும் எனவும், அவற்றை வெட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தமிழ்நாட்டு மரங்களின் சின்னமாக பனை மரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்தையாபுரம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பனை மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, உரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து மகன் செல்வராஜ் என்பவர் சுமார் 42 பனை மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து பெரியசாமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பனை மரங்களை வெட்டிய செல்வராஜை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

இயற்கை நேசிப்பவன்Sep 14, 2021 - 10:20:06 AM | Posted IP 108.1*****

காசு வாங்கி பிடித்து தண்டனை கொடுப்பதை விட, 10 மடங்கு பனை விதைகளை நட வேண்டும், 10 வருஷம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளவேண்டும் அப்படி பட்ட தண்டனை கொடுத்தால்தான்.. பனைமரங்கள் பாதுகாக்கப்படும் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory