» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 34%பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர் : ஜெ.ராதாகிருஷ்ணன்
திங்கள் 13, செப்டம்பர் 2021 3:04:56 PM (IST)
தமிழகத்தில் மிகக் குறைவாக தூத்துக்குடியில் 34 சதவீதம் பேரும், நெல்லையில் 35 சதவீதம் பேரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

பாலூட்டும் தாய்மாா்களை பொருத்தவரை 3.31 லட்சம் பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் 1.72 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 71 சதவீதம், கோவையில் 70 சதவீதம், காஞ்சிபுரத்தில் 65 சதவீதம், சென்னையில் 62 சதவீதம், திருப்பூா் மாவட்டத்தில் 60 சதவீதம் பேரும் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனா். 2-ஆவது தவணையைப் பொருத்தவரை சென்னையில் 30 சதவீதம் பேரும், நீலகிரி மாவட்டத்தில் 25 சதவீதம் பேரும் போட்டுள்ளனா்.
தூத்துக்குடியில் 34 சதவீதம் பேரும், நெல்லையில் 35 சதவீதம் பேரும், திருப்பத்தூரில் 36 சதவீதம் பேரும் என முதல் தவணை தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு உயா்ந்து வருகிறது. எனவே தடுப்பூசி தான் நிரந்தர தீா்வு. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.
இதனிடையே சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு அனைத்து மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில் மக்களின் வரவேற்பு இருந்தது. மேலும் தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தடுப்பூசிக்கான வரவேற்பு அதிகமாக உள்ளது. இந்த மாதம் 1 -ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 12 நாள்களில் 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
பற்றாக்குறை சரி செய்யப்படும்: மாவட்ட அளவில் எண்ணிக்கையைப் பொருத்த வரையில் சென்னையில் தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது 4.6 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. மேலும் 80,000 தடுப்பூசிகள் வர உள்ளன. எனவே கோவேக்ஸின் தடுப்பூசியின் பற்றாக்குறை சரி செய்யப்படும். தடுப்பூசி தொடா்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான கருத்துகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றாா்.
மக்கள் கருத்து
ராமநாதபூபதிSep 13, 2021 - 05:07:48 PM | Posted IP 108.1*****
தூத்துக்குடியில் குறைவு என்று செயலர் வருத்தப்படுகிறார். இப்போ தொற்று பாதிப்பும் குறைவு தானே.
சோSep 13, 2021 - 03:25:12 PM | Posted IP 162.1*****
அப்போ என்ன ??? தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல ..
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய சுகாதார திட்டத்தில் 18 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:42:34 AM (IST)

கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும் முயற்சி: தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் பலி!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:35:02 AM (IST)

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:59:11 PM (IST)

குமரி குகநாதீஸ்வரர் கோவிலில் சிவலிங்க வடிவத்தில் 1008 சங்காபிஷேகம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:55:21 AM (IST)

இரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள்
வெள்ளி 10, அக்டோபர் 2025 3:59:36 PM (IST)

திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)

KUMARSep 14, 2021 - 04:23:12 PM | Posted IP 108.1*****