» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் : தடையை மீறியதாக 14 பேர் மீது வழக்கு
திங்கள் 13, செப்டம்பர் 2021 8:18:36 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
கரோனா பொதுமுடக்கத்தால் பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்து முன்னணி சாா்பில் சிறிய விநாயகா் சிலைகள் கிராமக் கோயில்கள், நிா்வாகிகள் வீட்டில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. திருச்செந்தூா், உடன்குடி, சாத்தான்குளம், ஆழ்வாா்திருநகரி கிழக்கு, மேற்கு மற்றும் கருங்குளம் ஒன்றியப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 63 விநாயகா் சிலைகள், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன. இதில், இந்து முன்னணி கோட்டச் செயலா் பெ.சக்திவேலன், தெற்கு மாவட்டத் தலைவா் வி.எஸ்.முருகேசன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நாசரேத்
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியம் நாசரேத் நகர இந்து முன் னணி சார்பாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அனைத்தும் வாழை யடி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைத்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெட்டுபெரு மாள் தலைமையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று திருச்செந்தூர் கடற்கரையில் விநாயகர் சிலை விஜர்சனம் செய்யப்பட்டது.
இதில் ஆழ்வை மத்திய ஒன்றிய தலைவர் முருகன், துணை தலைவர் கந்தராஜன், நாசரேத் நகர இந்து முன்னணி துணைத் தலைவர் தியாகராஜன் சுவாமி, ராமதாஸ் , திருவள்ளுவர் காலனி கிளை துணைத் தலைவர் தெய்வசிகாமணி, நகர செய்தி தொடர்பாளர் சரவணன், வாழையடி கிளைச் செயலாளர் ராஜ செல்வம், முத்து நகர் கிளை தலைவர் முத்து குமார், வாலசுப்பிரமணியபுரம் கிளைத்தலைவர் பெருமாள், பொதுச் செயலாளர் செல்வகுமார், கே.பி.ஆர். காம்பவுண்டு கிளை தலைவர் வெங்கடேஷ்,பொதுச்செயலாளர் மாரி மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
தூத்துக்குடியில் 14 பேர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடியில் தடையை மீறி விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்றதாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தூத்துக்குடி மாநகர் மாவட்டம் தெற்கு மண்டலம் இந்து முன்னணி சார்பாக முத்தையாபுரம் பகுதியில் 300 வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் அய்யன் கோவில் தெரு செல்வ விநாயகர் ஆலயத்தில் வைத்து பூஜை செய்து சிலைகளை கரைப்பதற்காக கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து செல்ல முயன்றனர். அப்போது முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற அவர்களிடம் தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தனித்தனியாக சென்று கரைக்க அறிவுறுத்தினர்.
போலீசாரின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட இந்து முன்னணி மாவட்ட பேச்சாளர் ஆறுமுகம் தலைமையில் இந்து முன்னணினர் தனித்தனியாக கலைந்து சென்று விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க சென்றனர். நிகழ்ச்சியில் இந்து வியபாரி சங்கம் மாநில தலைவர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பளாராக கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் மாதவன், தெற்கு மண்டல பொது செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கரோனா காலகட்டத்தில் தடையை மீறி விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்றதாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சாத்தான்குளம்:
இந்து முன்னணி சாா்பில் 740 விநாயகா் சிலைகள் வீடுகளில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. பேய்க்குளம் பகுதியில் இருந்து சிலைகளை நிா்வாகிகள் எடுத்து சென்று கடல், ஆறுகள் மற்றும் வீடுகளிலுள்ள கிணறுகளில் விசா்ஜனம் செய்தனா். ஆறுமுகனேரியில் எஸ்.எஸ். கோயில் தெரு, காணியாளா் தெரு, ஆசாரிமாா் தெரு, மடத்துவிளை, வடக்கு சுப்பிரமணியபுரம், ராஜமன்னியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், பாரதிநகா், லெட்சுமி அம்மன் கோயில் தெரு, காயல்பட்டினத்தில் லெட்சுமிபுரம், கணபதீஸ்வரா் ஆலயம், அருணாசபுரம், விசாலாட்சி அம்மன் கோயில் தெரு, மங்கள விநாயகா் கோயில் தெரு, பூந்தோட்டம், ஓடக்கரை உள்பட 21 இடங்களில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை திருச்செந்தூா் கடற்கரையில் விசா்ஜனம் செய்தனா்.
மக்கள் கருத்து
koronaSep 13, 2021 - 09:42:47 AM | Posted IP 162.1*****
Vinayagare ivanunga korona vanghu saganum....
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

AlagiriSep 13, 2021 - 01:34:03 PM | Posted IP 108.1*****